சென்னை (29 மார்ச் 2020): தமிழகத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் 8 பேரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதில், 10 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 43,538 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். என்பதாக பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
#CoronaUpdate: #TN reports 8 new positive cases from Erode (contact of the Thai Nationals who are undergoing treatment at IRT Perundurai).The Pts were identified thru #TNHEALTH’s contact tracing. All patients are isolated for treatment. @MoHFW_INDIA @CMOTamilNadu #Vijayabaskar
— Dr C Vijayabaskar – Say No To Drugs & DMK (@Vijayabaskarofl) March 29, 2020