புதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊரடங்கு ஆணையைத் திட்டவட்டமாகக் கடைப்பிடிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் பல இடங்களில் தேவையில்லாமல் மக்கள் வெளியே வந்து நடமாடுகின்றனர்.
இந்தப் புதிய அறிவிப்பின் மூலம் ஒருவேளை மக்கள் அநாவசியமாக வெளியே வந்தால், அவர்களை அழைத்துச் சென்று 14 நாள்கள் பாதுகாப்பாகத் தனிமை முகாமில் அரசே வைத்திருக்கும் நிலையேற்பட்டுள்ளது.