நான்காம் வகுப்பு மாணவன் தற்கொலை!

Share this News:

மன்னார்குடி (16 ஏப் 2020): மன்னார்குடியில் நான்காம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் மதன். கும்பகோணத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்கி 4ம் வகுப்பு படித்து வந்த மதன், ஊரடங்கு பிறப்பித்ததால் பள்ளி விடுமுறையை முன்னிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டிலுள்ள அனைவரும் உணவருந்திக் கொண்டிருந்த போது முருகேசன், மதனை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மதன் வீட்டிலுள்ள அறைக்குச் சென்று கதவை பூட்டிக்கொண்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share this News:

Leave a Reply