ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் நடைபெற்ற உயர்கல்விக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வுகளில் சல்ஜி பரன் என்ற மாணவி முதலிடம் பெற்றார்.
அவருடன் முதல் பத்து மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா உயர்கல்வி அமைச்சரக அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.
தாலிபான் அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் ஷேக் அப்துல் பகி ஹக்கானி மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.