சென்னை (22 டிச 2022): தி.மு.க சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான் இன்று (டிசம்பர் 22) காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.
தி.மு.க சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டர் மஸ்தான் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராக இருந்து வந்தார்.
இந்தநிலையில், இன்று காலை சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, டாக்டர் மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு தி.மு.க.வினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.