மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை!

Share this News:

திருச்சி (30 ஜன 2020): திருச்சியில் மருத்துவர் ஒருவர் தனக்குத் தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் தென்னூர் பகுதியில் மிகப் பிரபலமான மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக இருப்பவர் சரவணன். கடந்த 26 ஆம் தேதி சரவணன் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்தார். அப்போது மருத்துவமனையின் நான்காவது தளத்தில் உள்ள அறைக்குச் சென்று அவர் திடீரென தனது இடது கையில் மயக்க ஊசி அதிக அளவில் போட்டுக்கொண்டார். அளவு அதிகமானதால் ஊசி மருந்து விஷமாக மாறி அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த அவரை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பலனின்றி பரிதாபமாய் இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவர் சரவணன் தந்தை செல்வராஜ் தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் தில்லை நகர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணையில் திருமணத்திற்காக சமீபத்தில் பார்த்த பெண்ணை அவருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காதல் விவகாரம் வேறு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply