கோவை சம்பவம் – நெல்லையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Share this News:

நெல்லை (10 நவ 2022): அண்மையில் கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் அதிரடியாக 45 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், நெல்லை மற்றும் பாளையங்கோட்டை என இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் இருக்கக்கூடிய சதாம் உசேன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதேபோல் பாளையங்கோட்டையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரக்கூடிய ராஜ்குமார் என்பவர் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சென்னை, கோவை உள்ளிட்ட 45 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *