சென்னை (18 ஆக 2020): அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லட்சுமணன், “தமிழகத்தின் நலனையும் உரிமையையும் பாதுகாத்துக்கொண்டிருக்கிற கட்சி திமுக. ஆளுமைமிக்க தலைமையின் கீழ் பணியாற்றவே திமுகவில் இணைந்துள்ளேன். தமிழகத்தில் வலுவான அரசு அமைய வேண்டிய தேவை இருக்கிறது. இளைஞரணி செயலளார் உதயநிதிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
மேலும் “கொரோனா காலத்தில் கூட அதிமுகவில் வேட்பாளர் பிரச்சனை உச்சத்தை தொட்டுள்ளது.” என்றும் அதிமுக மீது குற்றம் சாட்டினார்.
அதிமுகவில் லட்சுமணனின் மாவட்டச் செயலாளர் பதவி சமீபத்தில் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.