புதுடெல்லி (18 ஆக 2020): கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து குர்கானில் உள்ள மேதாந்தா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இரு வார சிகிச்சைக்குப் பிறகு அவரது பரிசோதனை முடிவில், வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அமித் ஷாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.