இவ்வருட பொங்கலுக்கு செம்ம பிஸினஸ் – எதில் தெரியுமா?

Share this News:

சென்னை (19 ஜன 2020): இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை சுமார் 606 கோடி ரூபாய் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இந்தமுறையும் சுமார் ரூ.500 கோடி வரை இலக்கு வைத்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இலக்கை விட அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை அடுத்து ஜனவரி 14, 15 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் இந்த விற்பனை ஆகியுள்ளது. ஜனவரி 16 திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அதாவது தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மதுவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் 143 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி போகியன்று ரூ. 178 கோடிக்கும், 15 ஆம் தேதி பொங்கல் அன்று ரூ. 253 கோடியும், காணும் பொங்கல் 17 ஆம் தேதியன்று ரூ. 174 கோடியும் மது விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Share this News:

Leave a Reply