நாகப்பட்டினம் (27 மே 2020): நாகை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாகியுள்ளது.
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா சென்னையை மிக அதிக அளவில் பாதித்துள்ளது. மேலும் பிற மாவட்டங்களிலும் பரவி வருகிறது.
இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.
அவர்களில் பலர் படிப்படியாக குணமாகி வீடு திரும்பினர். அங்கு கடந்த 2 வாரங்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவாத நிலையில், ஏற்கனவே 48 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், மீதமிருந்த 3 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் நாகை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.