பாலியல் வழக்கில் இந்து மகா சபா தலைவர் கைது!

Share this News:

சென்னை (03 மார்ச் 2020): பெண் நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்து மகா சபா தலைவர் ஸ்ரீகண்டன் கைது செய்யப்பட்டார்.

‘அகில இந்திய இந்து மகா சபா’ என்ற அமைப்பின் தலைவராக ஸ்ரீகண்டன் செயல்படுகிறார். இந்த அமைப்பின் அலுவலகம் சென்னை கீழ்ப்பாக்கம், ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த அமைப்பின் பெண் நிர்வாகி நிரஞ்சனி, ஸ்ரீகண்டன் மீது பாலியல் புகார் கொடுத்தார்.

நிரஞ்சனி கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் ஸ்ரீகண்டன் மீது 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், தொழிலதிபர் விமல்சந்த் என்பவரும் ஸ்ரீகண்டன் மீது ரூ.14 லட்சம் மோசடி புகார் அளித்திருந்தார். தாம் அந்தப் பணத்தைத் திருப்பிக்கேட்டதாகவும், ஆனால் அதை திருப்பிக் கொடுக்காமல் ஸ்ரீகண்டன் மிரட்டலில் ஈடுபட்டார் என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த புகாரின் பேரிலும் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த ஸ்ரீகண்டன் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். தீவிர விசாரணைக்குப்பின் அவரை போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Share this News:

Leave a Reply