அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு 6 பேர் பலி!

Share this News:

வாஷிங்டன் (03 மார்ச் 2020): அமெரிக்காவின் வாஷிங்டனில் கொரோனா வைரஸுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் நான்கு பேர் உயிரிழந்ததாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொரோனாவால் மேலும் பலர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எந்த விதமான சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறி உள்ளார்.


Share this News:

Leave a Reply