லக்னோ (01 மார்ச் 2020): “என கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது” என்று டாக்டர் கஃபீல்கான் மனைவி சபிஸ்தா கான், அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்தன. ஆனால், டாக்டர் கபீல்கான் தன் சொந்த பணத்தில் ஆக்சிஜன் வாங்கி பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றினார். கபீல்கானின் நடவடிக்கையால் எனினும் அவர் மீது பழி சுமத்தி வேலையை விட்டு நீக்கியது யோகி ஆதித்யநாத் அரசு மேலும் அவரை வேண்டுமென்றே குற்றம் சாட்டி சிறையிலும் அடைத்தது. ஆனால் எந்தவித ஆதாரமும் இல்லை என நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.
எனினும் கபீல்கான் மீது எதாவது பழி சுமத்துவதை யோகி ஆதித்யநாத் அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் உத்திர பிரதேசம் அலிகார் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதாகவும், மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும் உத்திர பிரதேச அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில் கஃபீல்கான் மனைவி சபிஸ்தா கான் அலஹாபாத் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “என் கணவர் அப்பாவி, அவரை வேண்டுமென்றே சிறையில் அடைத்துள்ள போலீஸ் அங்கு அவருக்கு பல்வேறு சித்ரவதைகளை செய்வதாக கூறப்படுகிறது. அவரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் சபிஸ்தா கான் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கடிதத்தின் நகலை, தலைமை செயலர், மற்றும் சிறை தலைமை அதிகாரி உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.