சென்னை (14 பிப் 2020): சென்னை வண்ணாரப் பேட்டையில் காவல்துறை நடத்திய அராஜக வெறியாட்டத்திற்கு ஜமாத்துல் உலமா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த உலமா சபையின் அறிக்கையில் , “அமைதி வழியில் போராடிய பெண்கள் மீது காவல்துறை கண்ணியமற்ற முறையில் நடந்தது கடும் கண்டனத்துக்குரியது. மேலும் தடியடி நடத்திய காவல்துறை மீது அரசு துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் கருப்புச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.