சென்னை போலீஸ் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நள்ளிரவில் ஆர்ப்பாட்டம்!

Share this News:

சென்னை (14 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து, மக்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீது காவல்துறை கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாக உள்ளது.

இந்நிலையில் சென்னையில் போலீஸ் நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Share this News:

Leave a Reply