பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம்!

Share this News:

சென்னை (12 பிப் 2022): திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் கு.க. செல்வம். கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் முக்கியமானவராகவும் அவர் இருந்து வந்தார்.

இந்நிலையில், திமுக மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகிய அவர் பாஜகவில் இணைந்தார். சுமார் இரண்டு ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்த கு.க. செல்வம், இன்று மாலை திடீரென முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவர் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை பாஜக தொடர்ந்து புறக்கணித்து வந்ததால் அக்கட்சியை விட்டு விலகியதாக கூறினார்.


Share this News:

Leave a Reply