தூத்துக்குடி (20 ஜன 2020): பெரியார் குறித்து அவதூறு தகவல் வெளியிட்டதற்காக ரஜினி தகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று திக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி. ரஜினிகாந்த் தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காதது குறித்து கேள்வி எழுப்பியதும், ‘’ரஜினிகாந்த் இதற்கு தகுந்த விலையை கொடுப்பார். தவறான தகவலை தெரிவிக்கும் போது மற்றவர் சுட்டிக்காட்டினால் அதை ஏற்று திருத்திக் கொள்வதுதான் சரி.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் எப்படி பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அவர் என்ன நிலை எடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் ’’ என்றார்.