கும்பகோணம் (06 ஏப் 2020): ஊரடங்கு உத்தரவால் உறைந்து போயிருக்கும் ஏழை மக்களுக்கு மேலக்காவேரி முஸ்லிம் அமைப்பினர் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி புரிந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ளது. இதனால் வீடற்றோர், விதவைகள், தினசரி கூலியாட்கள், வயோதிகர்கள், சில பல ஏழைக் குடும்பத்தினர்கள் உணவுக்கு வழியின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பசியைப் போக்கும் விதமாக மேலக்காவேரி முஸ்லிம் பரிபாலன சபை (MMWA) உறுப்பினர்கள், கும்பகோணம், மேலக்காவேரி, சுவாமிமலை பகுதியில் உள்ளோருக்கு உலர் உணவு பொதிகள் வழங்கியுள்ளனர்.
மேலக்காவேரி முஸ்லிம் பரிபாலன சபையின் (MMWA) முயற்சியில் நடைபெற்று வரும் உலர் உணவு பொதிகள் வழங்கும் திட்டத்தின் முதலாம் கட்டம் நேற்று (05.04.2020) நடைபெற்றது. அரசியல், மத, இன வேறுபாடின்றி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிகழ்வில் மேலக்காவேரி முஸ்லிம் பரிபாலன சபையின் (MMWA) செயற்பாட்டாளர்கள் முகமது யூனுஸ் கான், அ.ஜாபர் சாதிக், அ.முகமது இசாக், முகமது பாயிஜ், சாகுல், அல்ஹாஜ் பாரூக், பாசிலா நஜீர் அஹமது, ஆட்டோ பரக்கத் அலி, முகமது இபுராஹிம், கவிஞர் அயூப் கான் மு.அப்துல் அஜிஸ், ஜ.ஷஃபி பாரூக், அ.முகமது ரபீக், அ.முகமது அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.