சென்னை (10 மே 2020): டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க முற்பட்டால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டியதுதான் என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம்அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தமிழகத்தில் செயல்பட்டு வந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டிற்கு மக்கள், அரசியல் கட்சியின் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் நிலைபாட்டை விமர்சித்து நடிகர் ரஜினி காந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டாஸ்மாக்கை அரசு திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறுந்து விடுங்கள் என ரஜினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்’’ என தெரிவித்துள்ளார்.