இஸ்லாமியர்கள் தூண்டிவிடப்படுகிறார்கள் – ரஜினி பரபரப்பு பேட்டி!

Share this News:

சென்னை (05 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட இஸ்லாமியர்கள் தூண்டிவிடப்படுகிறார்கள் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது.

நான் முறையாக வருமான வரி செலுத்துபவன். என்பிஆர் அவசியம் தேவை. அப்போதுதான் வெளிநாட்டவர்களை அடையாளம் காண முடியும். இந்திய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் அவர்களுக்கு ஆதரவாக முதல் ஆளாக நான் நிற்பேன். முஸ்லிம்கள் அரசியல் கட்சிகளின் பகைடைக்காயாக இல்லாமல் யோசித்து செயல்பட வேண்டும்” என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ரஜினி இன்று பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply