சென்னை (09 மார்ச் 2020): நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதில், அதிமுக சார்பில் கே.பி. முனுசாமி, தம்பிதுரை ஆகியோரும், அதிமுக கூட்டணி சார்பில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 26.3.2020 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில், அதிமுக போட்டியிடும் மூன்று இடங்களில், இரண்டு இடங்களுக்கு கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.
1. கே.பி. முனுசாமி
கழக துணை ஒருங்கிணைப்பாளர்
முன்னாள் அமைச்சர்
2. டாக்டர் மு. தம்பிதுரை
கழக கொள்கை பரப்புச் செயலாளர்
மக்களவை முன்னாள் துணை சபாநாயகர்
மற்றும் கூட்டணி கட்சி சார்பில் 3. ஜி.கே. வாசன் போட்டியிடுகிறார்.
தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுவார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.