புதுடெல்லி (09 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனாவிற்கு 43 பேர் பாதிக்கப்படுள்ளனர்.
கடந்த வருடம் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 97 நாடுகளில் பரவி விட்டது. 3 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.