எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பாஜகவினர் முஸ்லிம்களுக்கு திடீர் பாராட்டு!

Share this News:

சென்னை (21 ஏப் 2020): பிற கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க தங்களது தங்களது பிளாஸ்மாவை வழங்க முன் வந்துள்ள தப்லீக் ஜமாத்தினருக்கு எஸ்வி சேகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாஜக வை சேர்ந்த எஸ்வி சேகர் முஸ்லிம்களை குறி வைத்து தாக்கி பதிவிட்டு வருவார். ஒட்டு மொத்த இந்துத்வா கொள்கையினரும் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரப்பி வந்தனர்.

இது இப்படியிருக்க திடீர் திருப்பமாக முஸ்லிம்களை பாஜகவினர் பாராட்ட தொடங்கிவிட்டனர். இதுகுறித்து எஸ் வி சேகர் ட்விட்டரில் இட்டுள்ள பதிவில், “கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுமேற்கொண்டு வரும் நிலையில், (ஊநீர்) plasma ரத்த தானம் செய்ய முன் வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை பாராட்டி, நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். இதுவே மத ஒற்றுமை.” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல பாஜகவின் நாராயணன் என்பவரும் முஸ்லிம்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளர்.

இந்தியாவில் மத ரீதியாக முஸ்லிம்களை துன்புறுத்தும் நிகழ்வு சர்வதேச கவனத்தை பெற்றுள்ள நிலையில், வளைகுடா தலைவர்களிடமிருந்தும் நெருக்கடி வர தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இவ்வாறான பதிவுகள் வரத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply