சென்னை (21 ஏப் 2020): சன் டிவி தலைமை செய்தியாளர் ராஜாவை நீக்கம் செய்து சன் டிவி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாறன் பிரதர்ஸ் நடத்தும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டலடித்து வந்த வந்த வாட்ஸ் அப் மீம் ஒளிபரப்பு செய்யப் பட்டதாகவும் இதன் எதிரொலியாக, சன் டிவியின் தலைமை செய்தியாளரான ராஜா நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ராஜா உட்பட மேலும் மூவரும் நீக்கப் பட்டுள்ளதாக ட்விட்டரில் இதர ஊடகவியளாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். எனினும் இதுகுறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
சன் டிவியின் நிர்வாகிகளில் ஒருவரன தயாநிதி மாறன் திமுக எம்பியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலினை கிண்டலடித்து வெளியான மீம் இதுதான்.