மக்கா (27 பிப் 2020): உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் எதிரொலியாக சவூதி அரேபியாவிற்கு வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது சவூதி அரசு.
இதுகுறித்து சவூதி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உம்ரா மற்றும் சுற்றுலா விசாவில் சவூதி வருபவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே இந்தியாவிலிருந்து வரும் தகவல்படி, பல உம்ரா யாத்ரீகர்கள் இந்திய விமான நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
We ask God Almighty to spare all humanity from all harm#CoronaVirus#COVID19 pic.twitter.com/TEYvIW1Wbd
— Foreign Ministry 🇸🇦 (@KSAmofaEN) February 26, 2020