புதுடெல்லி (28 ஜன 2020): நீட் தேர்வை தமிழகத்தில் தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வு கட்டாயம் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாள்தோறும் மாற்ற முடியாது என கண்டனம் தெரிவித்தனர். எனவே நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.