புதுடெல்லி (19 ஜன2020): வாட்ஸ் அப் சமூக வலைதளம் திடீரென ஸ்தம்பித்துள்ளது.
வாட்ஸ் அப் செயலியில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வாட்ஸ்அப் சேவை பாதிக்கப்பட்டதால் வாட்ஸ்அப் டவுன் என்ற பெயரில் ட்விட்டரில் ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது.
உலகின் பல்வேறு இடங்களிலும் வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படம் பதிவேற்றம் ஆகாததால் பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து வாட்ஸ்அப் நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.