விருகம்பாக்கம் (12 மார்ச் 2021) : விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் மீது போட்டி திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு பரபரப்புகளுக்கிடையே இன்று (12.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. திமுகவில் 70 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 20 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்நிலையில் விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆதரவு கேட்டு சென்றபோது திமுக நிர்வாகி தனசேகரனின் ஆதரவாளர்கள் பிரபாகர் ராஜா மீது கற்கள் வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.