சென்னை (21 மார்ச் 2020): தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு பேர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் நியூசிலாந்தில் இருந்து வந்தவர். மூன்று பேருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.