திருப்பூர் (15 ஜன 2020): திருப்பூர் அருகே டிக்டாக் ஏற்படுத்திய நட்பு பிறகு விபரீதத்தில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் டிக்டாக் குறித்தும் அதன் விபரீதம் குறித்தும் நாம் கேள்வியுறுவது அதிர்ச்சியை ஏற்படுத்திய வண்ணமே உள்ளன.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேந்த 10 ஆம் வகுப்பு மாணவி டிக்டாகிலேயே அதிக நேரத்தை செலவிடுவார். அவ்வப்போது வீடியோக்களையும் பதிவிடுவார். டிக்டாக் மூலம் வேல்முருகன் என்ற வாலிபர் பழக்கமானார். நாளடைவில் அது காதலானது.
இருவரும் வீட்டுக்கு தெரியாமல் அடிக்கடி லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்னெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் வாக்குமூலத்தை வைது வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எத்தனை சம்பவங்கள் கேள்வியுற்றாலும் இதுபோன்ற அவலங்கள் தொடர்ந்துகொண்டே உள்ளன.