சென்னை (11 மார்ச் 2020): தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் செலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் பாஜக மாநில தலைவர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், புதிய பாஜக தலைவர் எல்.முருகனை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார். எல் முருகன் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் பி.எல். படிப்பும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.எல். படிப்பும் படித்தவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 15 வருடம் வழக்கறிஞர் அனுபவம் உள்ளவர்.