தஞ்சாவூர் (25 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தஞ்சாவூரில் ததஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மேல வஸ்தா சாவடி ரவுண்டானா அருகில் முழக்கங்கள் எழுப்பி நடத்தப் பட்டது.
இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ப. அப்துல் ரகுமான் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், எஸ்டிபிஐ உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.