தஞ்சை பெரிய கோவில் குட முழுக்கு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

தஞ்சாவூர் (05 பிப் 2020): தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது. இன்று புதன்கிழமை (பிப்.5) அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகம் உள்ளிட்ட பூஜைகளும், காலை 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் ஆகியவையும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கும், பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கு குடமுழுக்கும், மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெற்றன. இதில், கோயில் உள்…

மேலும்...

தஞ்சையில் குவியும் பக்தர்கள் – பெரிய கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

தஞ்சாவூர் (04 பிப் 2020): தஞ்சை பெரிய கோவிலில் நாளை 5 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலின் கும்பாபிஷேக விழா, 23 ஆண்டுகளுக்கு பின், நாளை நடைபெறுகிறது. யாகசாலை பூஜையை காண, 1ம் தேதி முதல், பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கும்பாபிஷேக விழாவை காண, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் வர துவங்கிஉள்ளதால், தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டுஉள்ளது. நாளை அதிகாலை,…

மேலும்...

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விவகாரம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தஞ்சாவூர் (31 ஜன 2020): தஞ்சை பெரிய கோவிலில் வரும் 5ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனை தமிழ் ஆகம விதிப்படி நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு மீது நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை கூறியபடி தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரு ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடைபெறும் என உத்தரவிடப்பட்டது. குடமுழுக்கு…

மேலும்...

தமிழுக்காக போராடுபவர்களெல்லாம் பயங்கரவாதிகளாம் – எச்.ராஜா ட்விட்!

தஞ்சை (30 ஜன 2020): தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபடு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளார் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா. தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்…

மேலும்...

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம்!

மதுரை (29 ஜன 2020): தஞ்சாவூர் பெரிய கோயிலின் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலில், 23 ஆண்டுகளுக்கு பின்னர், வரும் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த விழா, பூர்வாங்க பூஜையுடன் நேற்று (ஜன.,27) துவங்கியது. இதற்கிடையே, கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், சமஸ்கிருதத்தில் நடத்தகோரி சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை…

மேலும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் (25 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தஞ்சாவூரில் ததஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மேல வஸ்தா சாவடி ரவுண்டானா அருகில் முழக்கங்கள் எழுப்பி நடத்தப் பட்டது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார்….

மேலும்...

தஞ்சையில் பல லட்சம் மதிப்புள்ள கோவில் சிலை திருட்டு!

தஞ்சாவூர் (20 ஜன 2020): தஞ்சை கரந்தையில் பழமை வாய்ந்த கோவில் சிலை திருடப்பட்டுள்ளது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் கரந்தை ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரர் என்கிற சமண கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று (19ம் தேதி) காலை பின்புறக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், கோயிலில் இருந்த 3 அடி உயரத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆதீஸ்வரர் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒன்றரை அடி உயர ஜினவாணி…

மேலும்...

ரவுடிகளின் கூடாரமாகும் தஞ்சாவூர் – பீதியில் மக்கள்!

தஞ்சாவூர் (16 ஜன 2020): தஞ்சாவூரில் இருவர் கொல்லப் பட்ட நிலையில் கொலையாளிகள் இன்னும் இதுபோல சில சம்பவங்களைச் செய்தால்தான் தஞ்சாவூரில் நம்பர் ஒன்னாக இருப்போம்’ என கத்திக்கொண்டே சென்றதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வடக்கு வாசல். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர், சக்திவேல். கூலி வேலை செய்துவந்தார். இந்த நிலையில், சக்திவேலும் அவரது நண்பர் இரட்டைப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த செபஸ்டியன் மற்றும்…

மேலும்...

தஞ்சை அருகே கார் மோதி நான்கு பேர் பலி – பொங்கல் தினத்தில் சோகம்!

தஞ்சாவூர் (16 ஜன 2020): தஞ்சாவூர் அருகே கார் மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே வல்லம் புதூர் பகுதியில் ஜெபக்கூடம் உள்ளது. இதில், பொங்கல் திருநாளையொட்டி புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் வல்லம்புதூரிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு, பின்னர் தஞ்சாவூர் – திருச்சி முதன்மை சாலையிலுள்ள அணுகு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில்…

மேலும்...