சென்னை (19 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கனிமொழி எம்பி மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகமெங்கும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் 169 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது பரவாமல் தடுக்கும் வகையில், ” போராட்டங்கள், திருமண நிகழ்வுகள் போன்ற ஒன்றுகூடல்களை சற்று ஒத்திவைக்கலாம். ஒரு சமூகமாக நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும், அக்கறையோடும் இருப்போம்.” என்று கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.