சென்னை (14 ஜன 2020): தமிழகத்தில் இரண்டு நாட்கள் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் தென் தமிழகம், கடலூா், டெல்டா மாவட்டங்களில் காலை நேரங்களில் மிதமான பனிமூட்டமும், ஏனைய மாவட்டங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிபுகை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.