சிங்கப்பூர் (10 பிப் 2020): கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் சிங்கப்பூர் உள்ளது.
உலக அளவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 904 ஆக அதிகரித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. மேலும் 40,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவில் அதிகபட்சமாக ஹூபி பகுதியில் மட்டும் கொரோனா வைரசிற்கு இதுவரை 871 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரசிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிக்கப் பட்ட நாடுகளில் சிங்கப்பூர் இடம் பெற்றுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை 33 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளது உறுதி படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிங்கப்பூரில் ஆரஞ்ச் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிங்கப்பூர் மக்கள் பீதியில் உள்ளனர்.