சென்னை (10 செப் 2020): திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்று திமுக சார்பில் நடத்தப்பட்ட வீடியோ கார்ஃபரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் 3000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். இது டெல்லி வட்டாரத்தை அசைத்துப்பார்த்துள்ளது. ஏனென்றால் தேசிய கட்சிகள் கூட இந்த அளவில் தொழில்நுட்ப பொதுக்குழுவை கூட்டியதில்லை.
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் இந்த மீட்டிங் குறித்து தனது வியப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தன்னுடைய பாராட்டையும், வாழ்த்தையும் வெங்கையா நாயுடு அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் திமுகவும் பாஜகவும் நேரிடையாகவே மோதிக்கொண்டிருக்கும் நிலையில் வடக்கிலிருந்து வந்திருக்கும் பாராட்டு, வரும் தேர்தலை கணக்கில் கொண்டா? என்கிற சலசலப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.