வேலூர் (19 ஜன 2020): வேலூர் கோட்டையில் வைத்து இளம் பெண் மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.
வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த 24 வயது பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி செல்லப்பட்டு வேலூர் கோட்டை பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை அந்த இளம்பெண் ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வன்புணர்வு செய்த மூன்று பேரில் ஒருவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.