நடிகர் ரஜினி விவகாரம் குறித்து எச்.ராஜா கருத்து!

Share this News:

சென்னை (19 ஜன 2020): நடிகர் ரஜினி துக்ளக் விழாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது, ரஜினிகாந்த் தவறாக எதுவும் கூறவில்லை. அவர் மேலோட்டமாக ஒரு சம்பத்தை குறிப்பிட்டதற்கே, காவல் நிலையத்தில் புகார் அளிப்பதன் மூலம் அவரை திராவிட கழகத்தினர் மிரட்ட நினைக்கிறார்கள். ஆனால் அவர் எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார் என்று கூறியுள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கில், சமீபத்தில் நடந்த, துக்ளக் 50வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்றார். மேலும், பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் செருப்பு மாலை போடப்பட்டது என்றும் அப்போது ரஜினி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply