ஸ்மார்ட் போனால் ஏற்படும் மன உளைச்சல்களும் தற்கொலைகளும்!

Share this News:

ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது இளம் பருவத்தினரிடையே மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மனிதனின் வாழ்வில் இடம்பெறும் மின்னணு சாதனங்களும் அதிகரித்துவிட்டன. தற்போதைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாமல் உலகம் இயங்காது என்ற நிலை வந்துவிட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரம் கூட மொபைல் போன் இல்லாமல் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை.

ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து உபயோகிக்கும்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவது நீங்கள் நினைப்பதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஸ்மார்போன் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது இளம் பருவத்தினரிடையே மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கனடாவின் மருத்துவ சங்க இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், தூக்கம், கல்விப்பணி, சமூக செயல்பாடு, உறவுகள் ஆகியவை பாதிக்காத வகையில் ஸ்மார்ட் போன்களை எப்படி பயன்படுத்துவது என பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டுமெனில் மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதன்மை ஆய்வாளர் எலியா அபி கூறுகிறார்.

இன்றைய இளம் பருவத்தினர் சமூக ஊடகங்கள் இல்லாத உலகத்தை அறியாதவர்கள், டிஜிட்டல் இடையூறுகள், சமூக ஊடக செயல்பாடுகளின் தாக்கம் இவர்களிடையே சாதாரணமாகிவிட்டன.

சமூக ஊடக பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பதை விட, அதன் பயன்பாட்டை குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். குழந்தைகளின் உரையாடல்களின் ஒரு பகுதியாக பெற்றோர்கள் எப்போதுமே இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதிலும், முக்கியமாக சமூக வலைத்தளங்களினால் ஏற்படும் அபாயங்களை எவ்வாறு தடுப்பது, ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு ஒரு வரையறை விதிப்பது அவசியம் என்றும் இளம் பருவத்தினரிடம் பெற்றோர்கள் கலந்துரையாடி எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஏனென்றால், இளைஞர்கள் வாழ்க்கையில் சமூக ஊடகங்கள் எதிர்மறையான தாக்கத்தை அதிகளவில் ஏற்படுத்துகின்றன மற்றும் ஸ்மார்ட்போன், சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது இளம் பருவத்தினரிடையே மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் வழிவகுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் சமீபத்திய கருத்துக்கணிப்பில், 54 சதவீத இளைஞர்கள் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்றும் அதில் 50 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply