கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதனை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இது தமிழகத்திலும் வரும் மே 3 ஆம் தேதி வரை அமலில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மது கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் குடி பழக்கத்திற்கு அடிமையாக இருந்தவர் தற்போது அதிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக உள்ளார். அவர் இனி மது கடைகளே திறக்கக் கூடாது என்றும் என்னைப் போல் பலர் பல குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தற்போது என் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உள்ளேன். நன்றாக சாப்பிடுகிறேன். எனக்கு தெரிந்த மெக்கானிக் தொழிலை தொடர்ந்து செய்யவுள்ளேன் என்று தெரிவித்தார்.