கோலாலம்பூர் (21 ஜூன் 2020): மலேசியாவில் உள்நாட்டு பயனர்களின் மின்சார கட்டணங்களுக்கான கூடுதல் 942 மில்லியன் ரிங்கிட் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மலேசிய அரசின் பொருளாதார ஊக்க திட்டத்தின் போது அறிவிக்கப்பட்ட மின்சார கட்டணங்களில், இந்த உத்தரவு உதவியாக இருக்கும் என்று எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.
ஏற்கனவே மின் கட்டன உயர்வு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் இந்த உதவி திட்டத்தின் கீழ் RM77 (இந்திய மதிப்பில் ரூ.1350)-க்கும் குறைவான மின்சார பயன்பாட்டைக் கொண்ட சுமார் நான்கு மில்லியன் மக்கள் பயன் பெறுவார்கள் என்று டாக்டர் ஷம்சுல் அனுவார் தெரிவித்துள்ளார்.