பெல்ஜியம் (30 ஜன 2020): பெல்ஜியத்தை சேர்ந்த 92 வயது மூதாட்டி முஸ்லிம் குடும்பத்தினரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார்.
பெல்ஜியம் நாட்டில் காப்பகத்தில் வசித்து வந்த ஜியோர்கேட் என்ற மூதாட்டி அங்கிருந்து வெளியாகி முஹம்மது என்ற அவரது பழைய அண்டை வீட்டாருடன் வசிக்க விரும்பினார்.
முஹம்மது குடும்பத்தினரின் நடை, உடை, உபசரிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப் பட்ட ஜியோகேட் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.
முஹம்மது மொராக்கோ நாட்டை சேர்ந்தவர் எனினும் அவர் பெல்ஜியத்தில் ஜியோகேட் குடும்பத்தினரின் வீட்டுக்கு அருகில் 40 வருடங்களாக வசித்து வந்துள்ளார்.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முஹம்மது, ” எனக்கு அம்மா கிடையாது, நான் புதிய அம்மாவை பெற்றுள்ளேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம்” என்று தெரிவித்துள்ளார்.
வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த ஜியோகேட் தற்போது மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரிவித்துள்ளார்.