வாஷிங்டன் (27 ஜூன் 2020): இந்திய குடியுரிமைச ட்டத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவர் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான இணையதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கின்றன.இது பல இனம் மதம் மொழி பேசும் மக்களை கொண்ட இந்தியாவின் பாரம்பரிய மதச் சார்பின்மை கொள்கைக்கு எதிரானது.” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் “காஷ்மீர் மக்கள் இழந்த உரிமையை மீண்டும் பெற இந்தியா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியாக போராடுவோருக்கு தடை விதிப்பது அரசு கொள்கையை எதிர்ப்போரை அடக்குவது இணைய வசதியை முடக்குவது அல்லது அதன் வேகத்தை குறைப்பது போன்றவை ஜனநாயகத்தை பலவீனமாக்கி விடும். “என்றும் கூறப்பட்டுள்ளது.