ஆர்.எஸ்.எஸ், பாஜகவுடன் தொடர்புடைய அதிகாரிகள் நீக்கம் – அமெரிக்க அதிபர் அதிரடி!

Share this News:

வாஷிங்டன் (22 ஜன 2021): ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுடன் தொடர்பு வைத்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை பைடன் அரசு, தனது நிர்வாகத்திலிருந்து நீக்கம் செய்துள்ளது.

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அந்நாட்டின் துணை அதிபராகப் பதவியேற்றார்.

ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்தே பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களுக்கு தடை விதித்துள்ளார்.

இந்நிலையில் பைடன் அரசில் முக்கிய பதவிகளில் பணிபுரிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஏற்கனவே பரிந்துரைத்திருந்த சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோர் அந்த நியமன பட்டியலில் இடம்பெறவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆனால் அவர்கள் இருவரும் பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்பதை அறிந்த பைடன் அவ்விருவரையும் நீக்கம் செய்ய உத்தரவிட்டதாக தெரிகிறது,.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவிலுள்ள சுமார் 19 இந்திய அமைப்புகள் ஒன்றாக பைடனுக்கு கடிதம் அனுப்பினர். அதில், “ஆர் எஸ் எஸ் போன்ற இந்து அமைப்புகளுடன் உறவு கொண்ட பலர் ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளனர் எனவும் அவர்களின் பெயரையும் தெரியப்படுத்தி எச்சரித்திருந்தனர். அதில் சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply