அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபர் இருக்கையில் அமர முடியும்.
தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 209 வாக்குகளும், டிரம்ப் 118 வாக்குகளும் பெற்று முன்னணியில் உள்ளனர்.
பல மாகாணங்களில் முன்னணி நிலவரங்கள் மாறி மாறி வருகிறது.