கொழும்பு (28 ஏப் 2019): இலங்கையில் தடை செய்யப் பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் ஈ மில்லது இப்ராஹிம் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை, அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் ஈ மில்லது இப்ராஹிம் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை, அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அமைப்புகளின் சொத்துக்கள் தொடர்பாகவும் ஆராயுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட குறித்த இரு அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணும் ஏனைய அமைப்புகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.