கின்னஸ் பதக்கம் வென்ற உலகின் நீளமான சைக்கிள் பாதை!

தோஹா - கத்தாரில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான ஒலிம்பிக் சைக்கிள் சாலை!
Share this News:

கத்தார் (06 செப். 2020): கால்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்குப் புகழ்பெற்ற கத்தார் நாடு, உலகின் மிக நீளமான ஒலிம்பிக் சைக்கிள் சாலைக்காக கின்னஸ் பதக்கம் வென்றுள்ளது.

கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் துவங்கி, அல்கோர் நகரம் வரையில் இந்த சைக்கிள் சாலை நீண்டுள்ளது.

இது சைக்கிள் ஓட்டிகளுக்காக மட்டுமே அமைக்கப்பட்ட பிரத்யேக சாலையாகும். இதில் பிற வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

Ashghal wins praise for efforts to promote sports activities

33 கி.மீ நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்ட இச்சாலை, ஒலிம்பிக் விளையாட்டை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளதால் உலகத் தரத்தில் அமைந்துள்ளது. இதில் பயணம் செய்வது மனதிற்கு இதமான மகிழ்வளிக்கும் அனுபவமாக இருக்கும் என்று இதனை வடிவமைத்த அஷ்கால் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரதான சாலையை ஒட்டி  இந்த சைக்கிள் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், விரும்பியோர் வாகனங்களை நிறுத்தி சைக்கிள் ஓட்ட இயலும். அத்துடன், நள்ளிரவிலும் சைக்கிள் ஓட்டி மகிழ, பிரகாசமான தொடர் விளக்குகள் வசதி செய்யப்பட்டுள்ளன.

உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கும், சைக்கிள் பிரியர்களுக்கும் இச்செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *