ஸ்பெயின் (15 மார்ச் 2020): ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸின் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பெற்று வரும் கோம்ஸ் உடல் நலன் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலை ஸ்பெயின் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஸ்பெயின் அமைச்சருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.